அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் எண்ட்ரூ சைமன்ஸ்(Andrew Simons) தனது 46 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் குயீன்ஸ்லேண்ட் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றிலேயே எண்ட்ரூ சைமன்ஸ்(Andrew Simons) உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் எண்ட்ரூ சைமன்ஸ் 26 டெஸ்ட் போட்டிகளிலும், 198 சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும், 14 இருபதுக்கு இருபது போட்டிகளிலும் இதுவரை விளையாடியுள்ளார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு மற்றும் 2007 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அவுஸ்திரேலிய அணி உலக கிண்ண போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் எண்ட்ரூ சைமன்ஸ்(Andrew Simons) பிரகாசித்திருந்தார்.
No comments: