அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் ஆலோசிக்க நேற்றைய தினம் அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் 19 ஆவது திருத்தத்தை 21 ஆவது திருத்தத்தின் வடிவில் மீண்டும் அமுல்படுத்துவது முதல் படியாக இருக்கும் என ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது இரண்டாவது கட்டமாக மேற்கொள்ளப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
"ஜனாதிபதி பாதுகாப்பு இலாகாவைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா இல்லையா என்பது குறித்தும் கட்சித் தலைவர்கள் மேலும் விவாதிப்பார்கள். எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
No comments: