மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வநகர் கிழக்கு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் 17 வயதுடைய பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
17 வயதுடைய அரநாதன் ரோஜாவின் சடலமே செல்வநகர் கிழக்கில் மீட்கப்பட்டுள்ளது. காத்தான்குடியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் தோட்டத்தைப் பராமரிப்பதற்காக ஒரு குடும்பத்தை தனது வீட்டில் குடியமர்த்தினார்.
நேற்று மாலை 6 மணியளவில் வீட்டின் மின்விசிறியில் கயிற்றால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் காதல் காரணமாக சிறுமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: