சட்டத்துறைக்கு - முகநூல் ஊடாக பங்கம் விளைவித்த - மருதமுனை நால்வருக்கு கல்முனை நீதவான் நீதிமன்றினால் இன்று அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. சட்டத்துறையையும் சட்டத்தரணிகளின் தொழில் தர்மத்தையும் அவமதிக்கும் வகையில் தொடர்ச்சியாக பல முகநூல் பதிவுகளையும், பின்னூட்டங்களையும் இட்டுவந்த நபர்களுக்கெதிராக கல்முனை நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணி எஸ்.எச்.எம். மனார்த்தீனினால் தாக்கல் செய்யப்பட்ட MC/KAL/PVT/688/2022 இலக்க வழக்கானது இன்றைய தினம் (19.04.2022) ஆதரிப்புக்காக எடுக்கப்பட்டபோது - முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் ஆஜரான சட்டத்தரணிகள் மேற்கொண்ட சமர்ப்பணத்தில் திருப்தியுற்ற கௌரவ நீதிவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த வழக்கில் எதிரி/பிரதிவாதிகளாக மருதமுனையைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் முபாறக், இப்றாலெப்பை முகம்மது றியாஸ், சேகு இஸ்மாயில் மௌஜூத், அஸான் மனாஸ் ஆகியோர் பெயர்குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
மாளிகைக்காடு நிருபர்
No comments: