News Just In

4/21/2022 01:59:00 PM

ஓட்டமாவடியில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்



(எச்.எம்.எம்.பர்ஸான்)

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்து நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் இன்று (21) அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

கல்குடா சாரதிகள் சங்கம் ஏற்பாடு செய்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கல்குடா வேன் சாரதிகள். ஆட்டோ சாரதிகள், உழவு இயந்திர சாரதிகள் மற்றும் வர்தகர்கள், இளைஞர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள்.

இவ் ஆர்ப்பாட்டம் ஓட்டமாவடி வேன் தரிப்பிடத்தில் இருந்து ஓட்டமாவடி மேம்பாலம் வரை சென்று மீண்டும் வேன் தரிப்பிடத்தில் வைத்து முடிவடைந்தது.

போக்குவரத்துக்கு இடையூறுகள் இல்லாமல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பதாதைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பினை தெரிவித்ததுடன், ரம்புக்கன ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த நபருக்கும் நினைவு கூறப்பட்டது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டத்தரணி ஹபீப் றிபான், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் ஆகியோர் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்தன

No comments: