பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவி விலக வேண்டுமென முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அவர் அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதமரும் அமைச்சரவையும் உடனடியாக பதவி விலகி, சிறிய அமைச்சரவையை உள்ளடக்கிய புதிய ‘சர்வ கட்சி’ அரசாங்கம் நிறுவப்பட வேண்டும்.
புதிய அமைச்சரவை, நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.
சர்வகட்சி அமைச்சரவையானது தேசிய நிகழ்ச்சி நிரலில் கவனம் செலுத்த வேண்டும் என டலஸ் அழகப்பெரும கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments: