News Just In

4/27/2022 06:07:00 AM

மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த கோரிக்கை!

இலங்கையில் மருந்துகளுக்கான விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கையினை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மருந்துகளின் விலை கட்டுப்படுத்தப்படாத நிலையில், நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்திய நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கை நடைமுறையில் உள்ளபோதும், சில பொருட்கள் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யப்படுவதில்லை.

அவ்வாறு மருந்துகளின் விலை கட்டுப்படுத்தப்படாத நிலையில், நாட்டு மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இது தவறான வழிமுறை என்றே நாங்கள் கருதுகிறோம்.

ஆகவே, மருந்துகளின் விலைகள் கட்டுப்படுத்தப்படவேண்டியது அவசியமாகும். டொலரின் பெறுமதி அதிகரித்துள்ள நிலையில், மருந்துகளின் விலைகள் அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அரசாங்கம் மருந்துகளுக்கான விலையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்'' என்றார்.

No comments: