அரசாங்கத்தை பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஷிராஸ் ஷிராஸ் என்ற ராப் இசைக்கலைஞர் போராட்டக்களத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்தில் பாடலைப் பாடிக்கொண்டிருந்த அவர் சிறிது நேரம் கழித்து மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் உயிரிழப்பிற்கான காரணம் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: