News Just In

4/10/2022 12:06:00 PM

பட்டிருப்புத் தொகுதியில் - மிக நீண்ட வரிசையில் எரிபொருட்களுக்காகக் காத்திருக்கும் மக்கள்!



 ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் எரிபொருட்களைப் பெறுவதற்காக வெள்ளிக்கிழமையிலிருந்து(08) சனிக்கழமை(9) வரையில் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருட்களைப் பெற்றுக் கொள்வதை அவதானிக்க முடிகின்றது.

அப்பிரதேசத்தில் அமைந்துள்ள பெரியபோரதீவு, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, குருக்கள்மடம், கல்லாறு, களுவாஞ்சிகுடி, அகிய பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றன. சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எதிரிபொருட்கள் முடிந்து விட்டதாகவும் அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி, மற்றும் கார், உள்ளிட்ட பல வாகனங்களுடன் அதன் உரிமையாளர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந் எரிபொருட்களைப் பெற்றுச் செல்வதுடன், இன்னும் சிலர் கலன்களிலும் எரிபொருட்களைப் பெறுவதற்குக் நீண்ட வரிசையில் உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

அனைத்து எரிபொருன் நிலையங்களிலும், பொலிசார், மற்றும், இராணுவத்தினர் இணைந்து மக்களை வரிசைக் கிரமமாக அனுப்பி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

தாம் குறிப்பாக வெயில், மழை, இரவு என பாராது பல மணிக்கணக்காக காத்திருக்கின்ற போதிலும், 1000 ரூபாவிற்குத்தான் எரிபொருட்களைத் தருகின்றார்கள் இது இரண்டு நாட்களில் தீர்ந்து விடும், மீண்டும் மூன்றாவது நாள் இதுபோன்று மிக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலமை ஏற்படும். எனவே எமது வாகனங்களிலுள்ள எரிபொருள் தாங்கி முழுவதும் நிரம்பும் வகையில் எரிபொருட்களைத் தந்துதவினால் நாம் ஒரு வாரத்திற்கு பாவிக்க முடியும் அப்பகுதியில் எரிபொருட்களைக் கொள்வனவு செய்ய வந்திருந்த மக்கள் தெரிவித்தனர்.


No comments: