News Just In

4/05/2022 06:37:00 AM

கிண்ணியா பிரதேசத்தில் அரிய வகை சிறுத்தை பூனை ஒன்று கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது!

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் அரிய வகை சிறுத்தை பூனை ஒன்று கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை வனவிலங்கு ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை வனவிலங்கு ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய நேற்று மாலை (04) கிண்ணியா பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் தவறி விழுந்த நிலையில் இவ் அரிய வகை பெரிய சிறுத்தை பூனை மீட்கப்பட்டுள்ளது.

இந்த அரிய வகை சிறுத்தை பூனை நாட்டில் அழித்து வரும் இனமாக கருதப்படுகிறது.

இவ்வாறு மீட்கப்பட்ட இவ் அரியவகை சிறுத்தை பூனை இன்று மாலை கிண்ணியா வனப்பகுதியில் விடப்படும் என திருகோணமலை வன விலங்குகள் ஜீவராசிகள் பாதுகாப்பு தினைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments: