அதிமேதகு ஜனாதிபதியின் சபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவின் கீழ் தேசிய "கமசமக பிலிசந்தர" வேலைத்திட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) அவர்களின் தலைமையில் வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.
"கமசமக பிலிசந்தர" வேலைத்திட்டத்தின் கீழ் இறக்காமம் பிரதேச செயலக 12 பிரிவுகளிலும் குறைந்தது 05 வேலைத்திட்டங்கள் என்ற அடிப்படையில் 84 வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.வரவு செலவுத்திட்டம் 2022 க்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தியின் பயன்கள் விரைவாக மக்களுக்கு சென்றடையும் வகையில் கிராம மட்ட பிராந்திய அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி கருத்திட்டங்கள் பின்வரும் பிரிவுகளின் கீழ் செயற்படுத்தப்படவுள்ளது.
01. வாழ்வாதார அபிவிருத்தி - 40%
02. பொது உட்கட்டமைப்பு அபிவிருத்தி - 40%
03. சுற்றாடல் மற்றும் நிலையான அபிவிருத்தி - 10%
04. சமூக நலன் மற்றும் சமூக அபிவிருத்தி - 10%
இதனடிப்படையில் இராஜங்க அமைச்சர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷார்ரப் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோரின் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இத்தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. நஸீல், கணக்காளர் திருமதி றிம்ஷியா அர்சாட், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், திட்டமிடல் பிரிவு சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர், இராஜங்க அமைச்சர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷார்ரப் அவர்களின் இணைப்பாளர் எஸ்.எல்.எம். ரஜா உட்பட பிரிவுகளுக்கு பொறுப்பான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
நூருல் ஹுதா உமர்
No comments: