அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஜனாதிபதி பதவி விலகக் கோரியும் இரண்டாவது நாளாக போராட்டம் இடம்பெற்றது.
இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தனர். "Go home Gota " என்ற கோஷத்துடன் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வருகின்றன. மழை, வெயிலையும் பொருட்படுத்தாமல் போராட்டம் தொடர்கிறது.
இந்த நிலையில் இன்று குறித்த களத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு மக்கள் தங்கியுள்ளனர்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. போரின் இறுதிக்காலத்தில் முள்ளிவாய்க்காலில் மக்கள் முகாமிட்டிருந்ததை சித்தரித்து பலர் நிலைமைகளை படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
No comments: