ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகத் தயாரென அறிவித்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி சற்று முன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கும், சஜித்திற்கும் இடையில் குறித்த விடயம் குறித்து கடுமையான சொற்போர் இடம்பெற்றுள்ளது.
அனைத்துக் கட்சித் தலைவர்களும் தன்னை பதவி விலகுமாறு கோரினால் அதற்குத் தயார் என சபாநாயகரிடம் ஜனாதிபதி அறிவித்துள்ளதாக இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சற்று முன் சபாநாயர், “பதவி விலகத் தயாரென ஜனாதிபதி அறிவித்ததாக தெரிவிக்கப்படும் விடயத்தில் எவ்வித உண்மையும் இல்லை” என அறிவித்தார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “நீங்கள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வைத்து இந்த விடயத்தை தெரிவித்தீர்கள். நீங்கள கூறிய விடயத்தை தான் நான் இங்கு வந்து தெரிவித்தேன். பொய்களையும், திரிபுப்படுத்தப்பட்ட விடயங்களையும் சொல்ல வேண்டிய தேவை எனக்கு இல்லை. தொன் கணக்கில் பொய் சொல்லாதீர்கள்” என சபாநாயகரை நோக்கி தெரிவித்தார்.
இதேவேளை “நாடாளுமன்றில் 113 எம்பிக்களின் ஆதரவை காட்டுவதாக இருந்தால் ஜனாதிபதி ஆட்சிப் பொறுப்பை கையளிப்பதாக கூறினார்” என்றே தான் சுட்டிக்காட்டியதாக சபாநாயகர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் 113ஐ காட்டினால் ஜனாதிபதி பதவி விலகுவதாக கூறினார் எனில் அதனை விரைவில் காட்டுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
No comments: