News Just In

4/28/2022 12:35:00 PM

முழுமையாக முடங்கியது கொழும்பு நகரம்!




சமகால அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பு நகரம் தற்போது முழுமையாக முடங்கியுள்ளது.

நாடளாவிய ரீதியில் அரச மற்றும் தனியார் துறையின் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணியளவில் கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகள் முடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கள் பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: