News Just In

4/20/2022 02:20:00 PM

அமைச்சர் நஸீர் அஹமட்டிற்கு எதிராக ஏறாவூரில் ஆர்ப்பாட்டம்!




ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிசின் மட்டக்களப்பு மாவட்ட  நா டாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் அமைப்புப் பொறுப்பைப் பெற்றுள்ளதற்கு அவரது சொந்த ஊரிலே மக்கள் எதிப்பில் நேற்று (செவ்வாய்கிழமை) இரவு ஈடுபட்டிருந்தனர்.

அமைச்சரின் உருவப்படம் தாங்கிய பதாகைக்கு நாணையத்தாள்களின் மாலை இடப்பட்டு, பின்னர் பெட்டி ஒன்றின்மீது வைத்து வீதியில் வலம்வந்து நஸீர் அஹமட் ஒழிக என கோசமிட்டு, பின்னர் அதனை எரித்துள்ளனர்.

நாட்டுமக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தற்போதைய அரசில் அமைச்சுப் பொறுப்பை ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கக்கூடாது என இதன்போது மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: