அமெரிக்காவுக்கு எதிராக தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் ரஷிய இராணுவ உளவுத்துறை அதிகாரிகளை அடையாளம் காட்டுவரகளுக்கு 1 கோடி அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
ரஷிய இராணுவ உளவுத்துறை அதிகாரிகளை அடையாளம் காட்டுவது அல்லது அவர்களின் இருப்பிடம் குறித்த தகவல்களுக்கு 1 கோடி டாலர்கள் வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பிறநாட்டு அரசாங்கத்தின் கீழ் அமெரிக்காவின் முக்கியமான உட்கட்டமைப்பிற்கு எதிராக தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்படும் நபரின் அடையாளம் அல்லது அவர்களின் இருப்பிடம் குறித்த தகவல்களுக்கு 1 கோடி அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக , அமெரிக்காவுக்கு எதிராக குற்றவியல் சதியில் பங்கேற்றதாகக் கூறப்படும் ரஷியாவைச் சேரந்த யூரி செர்ஜியேவிச் ஆண்ட்ரியென்கோ, செர்ஜி விளாடிமிரோவிச் டெடிஸ்டோவ், பாவெல் வலேரிவிச் ஃப்ரோலோவ், அனடோலி செர்ஜியேவிச் கோவலேவ், ஆர்டெம் வலேரிவிச் ஓச்சிச்சென்கோ மற்றும் பீட்ர் நிகோலாயெவிச் பிளிஸ்கின் என்ற ஆறு பேர் குறித்த தகவல்களை தேடுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: