கவி புனைவதில் தன்குள்ள ஆற்றலால் இந்திய விருதைப் பெற்று இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார் பல்கலைக்கழக மாணவி டக்ஸனா கிருஸ்ணானந்தன்.தற்போது லத்வியா நாட்டின் றிகா பல்கலைக்கழகத்தில் மனித வள முகாமைத்துவக் கற்கையைத் தொடரும் இளம் படைப்பாளியான டக்ஸனா, தமிழ் நாட்டு முதலமைச்சர் ஸ்டார்லின் அவர்களின் சேவையைச் சிறப்பித்து சமீபத்தில் வழங்கப்பட்ட குறிஞ்சிக் கவிமலர் விருதைப் பெற்றுள்ளார்.
இந்த விருதை தமிழ் நாடு பசுமை வாசல் பவுண்டேஷன், பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், கல்வி அறக்கட்டளை, கம்பன் கழகம், ஆகிய அமைப்புக்கள் இணைந்து வழங்கியிருந்தன.
அதில் அரிதாய்ப் பூத்திடும் குறிஞ்சியாய் மாந்தரில் அரிதாய்த் தோன்றி அழகு தமிழில் அற்புதக் கவி படைத்து வரும் அருந்தமிழ்க் கவிஞராம் தங்களுக்கு “குறிஞ்சிக் கவிமலர் விருது” வழங்கிக் கௌரவிக்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவி டக்ஸனா ஏற்கெனவே 2017ஆம் ஆண்டிலிருந்து அவ்வப்போது பல்வேறு போட்டிகளில் கவி வடித்து கவிநிலா, சித்திரக்கவி, தங்கத்தாமரை, கவியரசி, விபுலமணி, ஆசுகவி, சிறுகதைச்சுடர் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும் இவர் ஊடகங்களில் "குகதா" என்ற புனைப் பெயரில் தனது கவிப் புலமையைக் காட்டி எழுதி வருகின்றார்.
No comments: