News Just In

3/30/2022 12:35:00 PM

கொழும்பு நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல்!


டீசல் பெற்றுத் தரக்கோரி கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக தாமரை தடாக அரங்கிற்கு அருகாமையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.டீசலை பெற்றுக் கொள்வதற்காக கொண்டு வரப்பட்ட போத்தல்களை வீதியில் வைத்து மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸாரால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.

No comments: