News Just In

3/25/2022 06:14:00 AM

வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பவர்களுக்கான எச்சரிக்கை தகவல்!

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியுடன் வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பதால் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டி உள்ளதுடன் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதேவேளை வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பது மிகவும் ஆபத்தானது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் கயான் முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று முன்தினம் (23-03-2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களில் பெற்றோல் போன்ற எரிபொருட்களினால் ஏற்படுகின்ற தீச் சம்பவங்கள் காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரண்டு நாட்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் உயிரிழப்பதாகவும், நாளாந்தம் 4 முதல் 6 வரையான விபத்துக்கள் பதிவாகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: