News Just In

3/24/2022 09:32:00 PM

மட்டக்களப்பு வீதி விபத்தில் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு!


மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பண்ணை வீதியில் இன்று (24) பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மாவடிவேம்பு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சிவலிங்கம் பவாநந்தகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.துவிச்சக்கர வண்டியில் வந்தவரை மாவடிவேம்பு - பண்ணை வீதி வழியாக வீதி அபிருத்தி வேலைக்காக கற்கல் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து தொடர்பாக பிரதேச மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து கலகத்தில் ஈடுபட்டனர். இதனால் அமைதியினமை ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு சந்திவெளி பொலிஸார் வருகை தந்து விசாரனைகளை மேற்கொண்டிருந்தனர்.

சடலம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய வாகனம் சந்திவெளிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்ப்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: