News Just In

3/09/2022 10:49:00 AM

சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் பெண்கள் கௌரவிப்பு நிகழ்வு !

சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவும், பெண்களை கௌரவிக்கும் நிகழ்வும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய திறந்த அரங்கில் மகளிர் தினமான செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.


பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் ஏ. எல்.அலாவுதீன் நெறிப்படுத்திய இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். ஸப்ராஸ் கலந்துகொண்டார். கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முஆபிக்கா, கணக்காளர் நுஸ்ரத் பானு கலந்து கொண்டதுடன் மேலும் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.எம். நஜீம், சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் யூ.எல்.ஏ. ஜுனைதா, சமூர்த்தி வங்கி முகாமையாளர் எஸ். றிபாயா, திட்ட முகாமையாளர் ஏ.எல்.ஏ. கபூர், மாவட்ட உள்ளக கணக்காய்வாளர் இஸட்.ஏ. றஹ்மான், சமூர்த்தி உதவி முகாமையாளர் கலாநிதி ஏ.எம். றியாத், சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம். சம்சுதீன், சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர், சாய்ந்தமருது 17 கிராம நிலதாரி எல். நாஸர், உட்பட சாய்ந்தமருது பிரதேச சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி பயனாளிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பெண்களின் முக்கியத்தும், சாதனைகள், மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பிலான பிரதான உரைகள் இடம்பெற்றதுடன் சாய்ந்தமருது 17 கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அப்துர்ரஹ்மானினால் லீடர் அஸ்ரப் பாடசாலைக்கு தளபாடம் வழங்கி வைக்கப்பட்டதுடன் பெண்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றது.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR




No comments: