News Just In

3/31/2022 09:23:00 AM

பாகிஸ்தான் அரசுவழங்கும் உயர் கல்விக்கான புலமைப் பரிசில்கள் !



hussein abdul
பாகிஸ்தான் அரசு இவ்வாண்டிலும் இலங்கையர்களுக்கு உயர் கல்விக்கான புலமைப் பரிசில்களை வழங்கவுள்ளதாக பாகிஸ்தான் உயர் கல்வி ஆணைக்குழுவின் திட்ட முகாமையாளர் ஜெஹான்ஷெப் கான் Jehanzeb Khan - Project Director Higher Education Commission Government of Pakistan தெரிவித்தார்.

பாகிஸ்தான் அரசின் உயர் கல்விக்கான புலமைப் பரிசிலின் நோக்கம் குறித்து மட்டக்களப்பு வலய கல்வி அதிகாரிகளுடன் ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 29.03.2022 இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜெஹான்ஷெப் கான் 1000 இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தான் அரசு புலமைப்பரிசில்களை வழங்குகிறது.

மருத்துவத்துறை பொறியியல்துறை சமூக விஞ்ஞானம் சட்டத்துறை நுண்கலை இதேபோன்று விண்ணப்பதாரிகள் விரும்பும் வேறு துறைகளுக்கும் புலமைப் பரிசில்கள் வழங்கப்படுகின்றன.

தெரிவு செய்யப்படும் இலங்கை மாணவர்கள் உயர் தரவரிசையில் உள்ள பாகிஸ்தான் பல்கலைக்கழகங்களில் படிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாங்கள் உயர் கல்வி நடவடிக்கைகளில் பெண்களை ஊக்குவிக்கின்றோம்” என்றார்.

இந்த புலமைப் பரிசில்களைப் பெற ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இறுதித் திகதி ஏப்ரல் 30 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தெளிவுபடுத்தல் சந்திப்பில் பாகிஸ்தான் உயர் கல்வி ஆணைக்குழுலின் ஆலோசகர் அவைஸ்; அஹமட் மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர் உமர்மௌலானா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே. பாத்திமா றிப்கா ஆகியோருட்பட கல்வி அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

No comments: