News Just In

3/10/2022 08:38:00 PM

விரக்தியிலிருந்தவருக்கு கிடைத்த இராஜாங்க அமைச்சர் பதவி!

ஜயந்த சமரவீர அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததை அடுத்து துறைமுகம் மற்றும் கப்பற்துறை இராஜாங்க அமைச்சர் பதவிக்கு லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை அண்மைய அமைச்சரவை மாற்றத்தின்போது தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த லொஹான் ரத்வத்தைக்கு அமைச்சுப்பதவி எதுவும் கிடைக்கவில்லை.

இதனால் தான் அரசியலில் தீர்க்கமான முடிவு எடுக்கவுள்ளதாக தனது நண்பர்களிடம் அவர் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமிழ் அரசியல் கைதிகளை சிறைச்சாலையில் அச்சுறுத்திய குற்றச்சாட்டில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு பதிவியிலிருந்து அவர் ராஜினாமா செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments: