News Just In

3/29/2022 10:05:00 PM

கல்லடி பிரதேசத்தின் மூத்த பிரஜையான சோமசுந்தரம் சிவலிங்கம் அவர்கள் இன்று இறைபதம் அடைந்தார்!

கல்லடி பிரதேசத்தின் மூத்த பிரஜையான சோமசுந்தரம் சிவலிங்கம் அவர்கள் இன்று (29.03.2022) மதியம் இயற்கை எய்தினார் .

சிவானந்த வித்தியாலயத்தின் ஆசிரியராகவும், விஞ்ஞான உதவி கல்விப்பாளராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்.

உதவிக்கல்விப் பணிப்பாளராக கடமை ஆற்றிய காலத்தில் உயர்தர விஞ்ஞான மாணவருக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர் பற்றாக்குறை கடுமையாக நிலவியது. கொத்தணி முறைமூலம் வார இறுதிநாட்களில் நடாத்தப்பட்ட விசேட வகுப்புகளுக்கு பொறுப்பாளராக இருந்து பலமாணவர்களின் பல்கலைகழக பிரவேசத்திற்கு காரணமாக இருந்தவர்.

பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்ட அன்னார் இராமகிருஷ்னமிஷன் அறநெறி பாடசாலையின் முன்னோடியும் ஆவார். அமைதியான சுபாவம் கொண்ட அன்னார் கல்லடி ஆலயத்தின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கியவர். சங்காரவேல் பவுன்டேசன் நிறுவனத்தின் தலைவராக இருந்து வறுமைக்கோட்டின் கீழ்வாழ்ந்த பல பல்கலைகழக மாணவருக்கு கல்விக்கான நிதிஉதவியை அவர்களின் கல்வி நிறைவுபெறும் வரை வழங்கியவர்.

அமர ர் சிவலிங்கம் ஐயாவின் இழப்பு மாணவ சமூகத்திற்கும் ,கல்லடி பிரதேச மக்களுக்கும் பேரிழப்பாகும்.





No comments: