News Just In

3/29/2022 05:23:00 PM

திராய்மடு 1ம் மற்றும் 3ம் குறுக்கு வீதிகளை தார் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகளை மாநகர முதல்வர் ஆரம்பித்து வைத்தார்



Jana Ezhil

“எழுச்சி மிகு மாநகரம்” திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட திராய்மடு 1ம் குறுக்கு இணைப்பு வீதி மற்றும் 3ம் குறுக்கு ஆகிய வீதிகளை தார் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (29) ஆரம்;பித்து வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபையின் 2ம் வட்டார உறுப்பினர் ஐயாத்துரை சிறிதரனின் வேண்டுகோளிற்கிணங்க மாநகர சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதியின் ஊடாக குறித்த வீதிகள் தார் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

சுமார் 3 மில்லியன் ரூபா நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி பணிகளை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர சபை உறுப்பினர்களான த.இராஜேந்திரன், வி.பூபாலராஜா, க.ரகுநாதன், து.மதன், வாழைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் கி.சேயோன் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

பல காலமாக புணரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாகக் காணப்பட்ட வீதிகளை அபிவிருத்தி செய்து தந்தமைக்கு வட்டார உறுப்பினருக்கும், மாநகர முதல்வருக்கும் குறித்த வீதியில் வசிக்கும் மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.



No comments: