News Just In

3/31/2022 11:00:00 AM

இலங்கைக்கு தேவையான மருந்துகளை தொடர்ச்சியாக வழங்குமாறு உலக வங்கியிடம் கோரிக்கை!


இலங்கைக்கு தேவையான மருந்துகளை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்காக ஒத்துழைப்பு வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உலக வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலக வங்கியின் தெற்காசிய வலயம் தொடர்பான பணிப்பாளர் லினோ ஷேர்பன் பென்ஸ் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகளை நேற்று(புதன்கிழமை) சந்தித்து பேசிய போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் ஒளடதங்களை வழங்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.

அத்துடன், இலங்கையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெற்றிகரமாக இடம்பெறுவதை உலக வங்கியின் தெற்காசிய வலய பணிப்பாளர் வரவேற்றுள்ளார்.

No comments: