News Just In

3/26/2022 07:03:00 AM

வனாந்தர தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட மரநடுகை!

சர்வதேச வனாந்தர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மர நடுகை திட்டம் வனஇலாகா திணைக்களத்தின் மூலம் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் வாழைச்சேனை வட்டார வன காரியாலயமும் வாழைச்சேனை பிரதேச சபையும் மற்றும் வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகமும் இணைந்து வாழைச்சேனை பொது மைதானத்தில் மர நடுகை திட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர்.

வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் என்.நடேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், வாழைச்சேனை வன விரிவாக்க உத்தியோகத்தர் எஸ்.எம்.சபீக், தொப்பிகல் பகுதி வன உத்தியோகத்தர் ஏ.எச்.எம்.கியாஸ், வாழைச்சேனை வர்த்தக சங்கத்தினர், வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முகமாகவும், நிழல் தரக்கூடிய மரங்களை நடும் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் வாழைச்சேனை பொது மைதானத்தின் அருகில் மரங்கள் நாட்டு வைக்கப்பட்டது.

எஸ்.எம்.எம்.முர்ஷித்




No comments: