News Just In

3/26/2022 07:12:00 AM

ரஷ்யாவின் ஏவுகணைகளில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை இலக்குகளை சரியாக தாக்காமல் செயலிழந்துள்ள சம்பவம்!

ரஷ்யாவின் ஏவுகணைகளில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை இலக்குகளை சரியாக தாக்காமல் செயலிழந்து போவதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனியார் செய்தி நிறுவனமொன்றிற்கு வழங்கிய பேட்டியிலே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா 31 ஆவது நாளாக பயங்கர தாக்குதல் நடாத்தி வருகிறது. அங்குள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றுவதற்காக போராடி வருகிறது.

ஏவுகணைகளின் 60 சதவீத தோல்வி விகிதத்தில் வெடிக்கத் தவறுவது மற்றும் இலக்கை தவறவிடுவது ஆகியவையும் அடங்கும்.

போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா 1,100 இற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியுள்ளது. ரஷ்ய ஏவுகணையின் தோல்வி விகிதம் நாளுக்கு நாள் மாறுபடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: