News Just In

3/28/2022 11:03:00 AM

மட்டக்களப்பில் முன்பள்ளி சிறார்களின் ஆற்றல்களை வளர்க்க சிறுவர் விவகார அமைச்சு நடவடிக்கை!





(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின்நோக்கு கொள் கைத் திட்டத்திற்கமைய சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு சிறுவர்களின் நலன்கள் தொடர்பாக பல விசேட திட்டங் களை அமுல் நடத்வுள்ளது.

இந்த விசேட திட்டத்திற்கமைய மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன் பள்ளி மற்றும் ஆரம்பக்கல்விஅடிப்படை வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் ராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த டி சில்வா வின் வழிகாட்டு தலி ல் இந்த விசேட திட்டங்கள் முன்பள்ளி பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.

இந்நடவடிக்கைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன் பிள்ளைப் பருவசிறார்களின் நலன்கருதி பல முன்னேற்றகரமான திட்டங்கள் முன்னெ டுக் கப்பட்டுள்ளன. இதற்கமைய முன் பிள் ளைப்பருவ சிறார்களின் நலன் களை திட்டமிடும் விசேட செய லமர்வொன்று இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

இச் செயலமர்வில் முன்பிள்ளைப் பருவ சிறார்களின் ஆற்றல்கள் திறமைகள் மனப்பாங்கு, விருத்தி செய்யும் நோக்கில் பல விட யங்கள் ஆராயப்பட்டன. முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி யில் பெற்றோரின் வகிபாகம், முன்பிள் ளைப்பருவ அபிவிருத்தியின் முக்கியத்துவம். முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி யில் அழகியல் செயல்பாட்டின் முக்கியத்துவம் பற்றிவிழிப்புணர்வூட்டும் செயல் திட்டங்கள் பல அமுல் நடத்தப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீசுதர்சனி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஏ .நவேஸ்வரன், முன்பிள் ளைப் பருவ தேசிய செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப் பாளர் வி. முரளிதரன் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிறுவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோரும் கலந்து சிறப்பித்தனர்.

அரச அதிபர் கருணாகரன் இங்கு கருத்து வெளியிடுகையில்;- முன் பிள்ளைப் பருவ காலத்திலேயே சிறார்களுக்கு ஒற்றுமை, இனங் களுக்கிடையில் நல்லுறவு, சிறந்த கல்வி கலாசார விழுமியங் களை யும் சிறந்த ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் சிறார்களின் நலன்களைப் பேணுவதற்காக அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் இங்கு கருத்து வெளியிட்டார்.




No comments: