News Just In

3/28/2022 11:10:00 AM

அதிரடி மாற்றம் செய்ய திட்டம்! ரணிலை பிரதமராக்கும் முனைப்புகளில் அரசாங்கம் - வெளியாகியுள்ள தகவல்


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கும் முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய அரசாங்கம் அரசியல் ரீதியான அதிரடி மாற்றமொன்றை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வெற்றிடத்திற்கு தேசிய அரசாங்கமொன்றை நிறுவி அதன் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு தீர்வாக அரசியலில் அதிரடி மாற்றமொன்றை செய்து அதன் ஊடாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தாம் பதவி விலகப் போவதில்லை என அண்மையில் பிரதமர் மஹிந்த கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ற போதும், தேசிய அரசாங்கம் பற்றியோ பிரதமர் பதவி பற்றியோ ரணில் இதுவரையில் தனது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: