பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சக்கர் மாவட்டத்தில் 18 வயது இந்து பெண் பூஜா படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை அடுத்து சக்கரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பூஜா குமாரியின் நெருங்கிய உறவினரான அஜய் குமார் பிபிசி உருதுவிடம், "இந்த சம்பவத்திற்குப் பிறகு, பூஜா எதிர்ப்பின் அடையாளமாக மாறிவிட்டார். இப்போது எங்கள் இதயங்களில் அவரைப்பற்றிய மதிப்பு உயர்ந்துவிட்டது," என்றார்.
குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தனது மகளைக் கடத்துவதற்காக வீட்டிற்குள் நுழைந்ததாகவும், ஆனால் எதிர்த்தபோது அவர்கள் பூஜாவைக் கொன்றதாகவும் பூஜா குமாரியின் தந்தை சாஹிப் ஆதி, சக்கர் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கில் குற்றம் சாட்டியுள்ளார்.
காவல்துறை உயர் மட்டத்தில் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறது, அதன் ஒவ்வொரு அம்சமும் மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது, மேலும் மீதமுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூஜாவின் கொலை உள்ளூர் இந்துக்களை கோபப்படுத்தியது. கூடவே அப்பகுதி முஸ்லிம்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பூஜாவின் வீட்டிற்கு திரண்டு வந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்று பூஜாவின் உறவினர் அஜய் குமார் கூறினார்.
No comments: