News Just In

3/23/2022 06:46:00 AM

தவறான விளம்பரங்களை வெளியிட்டமைக்காக சென்சோடைன் நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்!

பற்பசை தயாரிப்பு நிறுவனமான சென்சோடைன் நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள பல் மருத்துவர்களால் தங்கள் நிறுவனத்தின் பற்பசை பரிந்துரைக்கப்படுவதாகவும், சென்சோடைன் சென்சிடிவிட்டி பற்பசை உலகிலேயே சிறந்தது எனவும் தவறாக விளம்பரம் செய்ததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விளம்பரங்களை நிறுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தொலைக்காட்சி, யுடியூப்,முகநூல், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் இந்நிறுவனத்தின் விளம்பரங்களுக்கு எதிராக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்தது.

No comments: