News Just In

3/08/2022 07:51:00 PM

நிலக்கரி தட்டுப்பாடு நீடிக்குமானால் சுமார் 15 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் அபாயம்!

நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிலக்கரி இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட பணம் எரிபொருளை இறக்குமதி செய்யப் பயன்படுத்தப்படுவதால் இந்த நிலை ஏற்பட் டுள்ளது.

நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டால், மின் உற்பத்தி நிலையங்களில் சுமார் 15 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என அந்த வட்டாரங்கள் சந்தேகிக் கின்றன. இவ்வாறான மின்வெட்டு நாட்டிலேயே மிக நீண்ட காலமாக இருக்கும் எனவும் மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏப்ரல் இறுதிக்குள் நிலக்கரி இறக்குமதியைத் தொடங்கவில்லை என்றால், ஏப்ரலுக்குப் பிந்தைய பருவத்தில் எந்த நிலக்கரிக் கப்பலை யும் இறக்குமதி செய்ய வாய்ப்பில்லை.

எனவே, அடுத்த சில வாரங்களுக்குள் நிலக்கரி இறக்குமதியைத் தொடங்க வேண்டும், இல்லையெனில், மக்கள் பல நாட்கள் இருளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே பல்வேறு நெருக்கடியால் சிக்கியுள்ள மக்களுக்கு இந்த சுமை மேலும் அழுத்தங்களை கொடுக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

No comments: