அரசாங்கத்தின் சுபிட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைவாக நாடளாவிய ரீதியில் 'கிராமத்துக்கு கிராமம் வீட்டுக்கு வீடு' எனும் விஷேட நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் புதிய கோப் பிரஸ் (COOP FRESH) வர்த்தக நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் வழிகாட்டலில் வினைத்திறன் மிக்க கூட்டுறவு சங்கங்களை தெரிவு செய்து இவ்வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் கூட்டுறவு அதன் தனித்துவமான பயணத்தை நோக்கி எனும் தொனிப்பொருளில் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கமைவாக ஓட்டமாவடி பல நோக்கு கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய கோப் பிரஸ் வர்த்தக நிலையம் மற்றும் கலாசார மண்டபம் ஆகியன திறந்து வைக்கப்பட்டது.
ஓட்டமாவடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எம்.எம்.எம்.ஜெஸ்லின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் எம்.அஸ்மி ஆதம்லெப்பை, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர், மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஏ.வி.தங்கவேல், ஓட்டமாவடி பிரதேசத்திற்கான கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.ஏ.ஹாதி, கூட்டுறவு திணைக்கள அதிகாரிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கூட்டுறவு முன்பள்ளி மாணவர்களினதும் மற்றும் பிரதேச கலைஞர்களினது கலை, கலாசார நிகழ்வுகளும் மேடையோற்றப்பட்டதுடன், அதிதிகளும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிராம மக்களுக்கு குறைந்த விலையில் அனைத்து பொருட்களையும் இலகுவான முறையில் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments: