News Just In

2/24/2022 11:17:00 AM

ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு! பரபரப்பாகும் ஐரோப்பிய நாடுகள் - உக்ரைன் தலைநகரில் வெடிப்பு சத்தங்கள்!


யுக்ரைனில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதன் மூலம், ஜனாதிபதி விளாடிமிர் புடின், இரத்தக்களரி மற்றும் அழிவின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்று இங்கிலாந்தின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து விவாதிக்க யுக்ரைன் ஜனாதிபதியுடன் பேசியதாகவும், இங்கிலாந்து மற்றும் நட்பு நாடுகளின் தீர்க்கமான நடவடிக்கைக்கு அவருக்கு உறுதியளி;;த்துள்ளதாகவும் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்ய மறுப்பு
யுக்ரேனிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறப்படுவதை ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது .தமது படையினர், யுக்ரெய்னின் இராணுவ உள்கட்டமைப்பு, வான் பாதுகாப்பு மற்றும் வான படையின் உயர் துல்லிய ஆயுதங்களையே குறிவைப்பதாக ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

No comments: