News Just In

2/25/2022 11:51:00 AM

மட்டு. வாகரையில் தீயில் எரிந்த நிலையில் பெண் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு!


மட்டக்களப்பு வாகரையில் வீடு ஒன்றில் 64 வயதுடைய பெண் ஒருவர் தீயில் எரிந்து உயிரிழந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) சடலலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸர் தெரிவித்தனர்.
நாகபுரம் பால்சேனையைச் சேர்ந்த 64 வயதுடைய பூமணஜதேவி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சம்பவதினமான நேற்று இரவு குப்பி விளக்கு ஒன்றை எரியவைத்துவிட்டு அதற்கு அருகில் ஆழ்ந்த நித்திரையின் போது குப்பிவிளக்கு தீ அவர் மீது வீழ்ந்தன்காரணமாக அவர் தீபற்றி எரிந்துள்ள நிலையில் இன்று காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலைக்கு ஒப்படைப்பதற்காக நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை ஆமற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

No comments: