News Just In

2/26/2022 06:26:00 AM

நேற்று நள்ளிரவு முதல் டீசல் மற்றும் பெற்றோலின் விலையில் அதிகரிப்பு!

நேற்று நள்ளிரவு முதல் அனைத்து வகையான எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, அனைத்து வகையான டீசல் லீட்டர் ஒன்றுக்கு 15 ரூபாவினாலும், பெட்ரோல் லீட்டர் ஒன்றுக்கு 20 ரூபாவினாலும்  அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, பெற்றோல் 92-ஒக்டேனின் புதிய விலை 204 ரூபாவாக இருக்கும், டீசலின் புதிய விலை 139 ரூபாவாக இருக்கும்.

ஐஓசி நிறுவனம் இந்த மாதத்துக்குள் மேற்கொள்ளும் இரண்டாவது எரிபொருள் விலை திருத்தம் இதுவாகும். எனினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை தமது எரிபொருட்களின் விலையை அதிகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: