A to Z Media
மட்டக்களப்பு சிறைச்சாலையின் உற்பத்திகளின் அறுவடை விழா இன்று (23) திருப்பெருந்துறையில் உள்ள சிறைச்சாலைக்கு சொந்தமான திறந்தவெளி பண்னையில் இடம்பெற்றது.விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறைச்சாலையின் சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகர அவர்களது தலைமையில் அறுவடை விழா நிகழ்வுகள் இடம்பெற்றது.
மூன்று தசாப்த காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த குறித்த 23 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட பண்ணையில் கடந்த வருடம் 10 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்து பாரிய விளைச்சலை அடைய முடிந்ததாகவும் அதே போன்று இம்முறை 15 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மையும் 8 ஏக்கர் நிலப்பரப்பில் ஏனைய பயிர்ச்செய்கைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில் இம்முறை முழுக்க முழுக்க சேதனை பசளை பாவனையூடாக மேற்கொள்ளப்பட்ட வேளாண்மை கடந்த வருடத்தைப் போன்றே இவ்வருடமும் அதிக விளைச்சல் கொடுத்துள்ளதாகவும், அதிமேதகு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடணத்திற்கு அமைவாக பசுமை விவசாயப் புரட்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இப்பண்ணையில் சேதனைப்பசளை தயாரிக்கப்பட்டு, அதனை பயன்படுத்துவதன் ஊடாகவே இம்முயற்சி வெற்றியளித்துள்ளதாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகரஇதன்போது தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த செயற்பாடானது கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் ஒரு செயற்பாடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இவ்வாறு நஞ்சற்ற வேளாண்மை ஊடாக உற்பத்தி செய்யப்படும் நெல்லினையும் எனைய பயிர்வகை ஊடாக பெறப்படுகின்ற விளைச்சல்களையும் சிறைச்சாலையில் இருக்கும் சிறைக்கைதிகளின் உணவிற்காக பயன்படுத்துவதுடன் எஞ்சுகின்ற விளைச்சல்களை ஏனைய சிறைச்சாலைகளுக்கு அனுப்பிவைப்பதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு கடந்த ஆண்டு இடம்பெற்ற திறந்தவெளி சிறைச்சாலைகளுக்கிடையிலான தரப்படுத்தலில் தேசிய ரீதியில் மட்டக்களப்பு சிறைச்சாலை முதலாம் இடத்தினை பிடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.சிறைச்சாலையின் அத்தியட்சகர் எஸ்.எல்.விஜேசேகர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பதில் பிரதான ஜெயிலர் பி.டிலக்சன், சிறைச்சாலை காவலாளர்கள், ஊழியர்கள் மற்றும் புனர்வாழ்வு கைதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments: