ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றுள்ளது.
அடுத்த வார நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சார நெருக்கடிக்குத் தீர்வு காணல், மீள்பிறப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களைப் பயன்படுத்துதல், ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் மீள்பிறப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.
No comments: