News Just In

2/01/2022 07:44:00 PM

இனவாதிகளுக்கு சாட்டையடி கொடுத்த மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர்கள்!

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினூ மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பேராளர் மாநாடு இன்று (01.02.2022) புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் வெரோணிகா கேட்பவர் கூடத்தில் பி.ப 1.45 மணியளவில் ஆரம்பமாகி மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இம்மாநாட்டில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின்பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க, உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள், இணைப்பாளர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.

மஹிந்த ஜயசிங்க அவர்கள் உரையாற்றுகையில், ஆசிரியர்களின் ஒற்றுமையான போராட்டம் மூலம் எம் சம்பள முரண்பாட்டினை தீர்த்துக் கொண்டோம். கல்வி மூலம் பாரிய மாற்றத்தின் ஏற்படுத்தும் நாம் நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பாரிய பிரச்சினைகளை மாற்றியமைக்க வேண்டும். இதற்கு சிறந்த தலைமைத்துவம் ஒன்று வேண்டும். இத் தலைமைத்துவத்தை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளோம். இலங்கையிலுள்ள சகல அதிபர் ஆசிரியர்களும் சிற ந்த தலைமைத்துவத்தை தெரிவு செய்யவேண்டும். இலங்கை சுதந்திரம் அடைந்து இன்று 74 வருடங்கள் ஆகிவிட்டது. நாம் கற்கும் போதும் இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்று கற்றோம். இன்றும் நாம் எமது பிள்ளைகளுக்கும் அதையே கற்பிக்கின்றோம். எதிர்காலத்தில் அபிவிருத்தி அடைந்த நாடு என்று கற்பிக்க எமக்கு உரிமை இல்லை. இந்நிலையை நாம் மாற்றியமைக்கவும் ஊழல் அற்ற தலைமைத்துவத்தையும் வழங்க நாம் தயாராக உள்ளோம். இதற்காக அனைத்து அதிபர் ஆசிரியர்களும் எம்முடன் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் உரையாற்றுகையில், ஆசிரியர்கள் தம் உரிமைகளை தொடர்ந்தும் பெற்றுக் கொள்ள பார்வையாளர்களாக இல்லாமல் பங்காளர்களாக மாற வேண்டும். தேசிய இன ஒற்றுமை மூலமாகவே நாம் எமது போராட்டத்தை வெற்றி கொண்ட இந்நிலையில் இன்று இப்பேராளர் மாநாட்டின் நடத்தியுள்ளோம். எனவே தொடர்ந்தும் அதிபர் ஆசிரியர்கள் ஒற்றுமையுடன் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டார்.






No comments: