இமாம் ஜஃபர் ஸாதீக் சமூக சேவைகள் நிறுவனத்தினால் ஆயுள்வேத மூலிகைத் தோட்ட ஆரம்ப நிகழ்வும், ஆயுள்வேத வைத்திய முகாமும் நேற்று (09.02.2022) புதன்கிழமை கோறளைப்பற்று மத்தி பாலைநகர் கிராமத்தில் நிறுவனத்தின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இமாம் ஜஃபர் ஸாதீக் சமூக சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எல்.ரி.எம்.ஹலீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்தியட்சகர் வைத்தியர் திருமதி.ஜே.பாஸ்கரன், ஏறாவூர் ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்தியட்சகர் வைத்தியர் எம்.எஸ்.எம்.லாபீர், ஆயுள்வேத வைத்தியர்களான வைத்தியர் என்.எம்.ஸபீர், வைத்தியர் கே.சுதர்சினிஇ வைத்தியர் டபிள்யூ.கிருஸாந்த், வைத்தியர் எம்.சஹீட் ஆகியோர் கலந்து கொண்டு ஆயுள்வேத முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வு கருத்தரங்குகளை மேற்கொண்டதுடன், ஆயுள்வேத வைத்திய முகாமினையும் மேற்கொண்டனர்.
இதன்போது பாலைநகர் மயிலங்கரச்சை தியாவட்டவான் கேணிநகர் போன்ற மீள்குடியேற்ற கிராமங்களை சேர்ந்த தமிழ் முஸ்லிம் மக்கள் ஆயுள்வேத மருத்துவ முகாமில் கலந்து கொண்டதுடன் ஆயுள்வேத மூலிகைத் தோட்டத்தில் அதிதிகளுடன் இணைந்து மூலிகை மரங்கள் நாட்டி வைத்தனர்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments: