News Just In

2/24/2022 01:29:00 PM

சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கான விழிப்புணர்வு!



எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஓட்டமாவடி பிரதேச செயலக பரிவில் கிராம ரீதியாக நிறுவப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜாவின் வழிகாட்டலில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன்; தலைமையில்; நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.நியாஸ், வாழைச்சேனை பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்பு பொறுப்பதிகாரி வி.பி.சிறியரத்ன, பிரதேச பாடசாலை அதிபர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கிராம ரீதியாக நிறுவப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களின் வினைத்திறன் மற்றும் அது தொடர்பில் தாங்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும், முக்கியமான சில புரிந்துணர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கிலான செயலமர்வு இடம்பெற்றது.

அத்தோடு சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பிலான கருத்துப் பகிர்வுகளும் இடம்பெற்றது.



No comments: