News Just In

2/23/2022 06:06:00 PM

மட்டு ஆரையம்பதியில் பஸ், மோட்டர்சைக்கிள் விபத்து ; ஒருவர் உயிரிழப்பு - பஸ் சாரதி கைது !


மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி ஆரையம்பதியில் பஸ் ஒன்றும் மோட்டர்சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டர்சைக்கிளை செலுத்திச் சென்றவர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று புதன்கிழமை (23) பகல் 11 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.கொக்கட்டிச்சோலை, கச்சக்கொடி சுவாமிமலை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய முத்துபண்டா யோகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஆரையம்பதியில் இருந்து மட்டக்களப்பை நோக்கி பயணித்த மோட்டர்சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளனதில் மோட்டர்சைக்கிளை செலுத்திச் சென்றவர்; உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







No comments: