News Just In

2/25/2022 12:24:00 PM

பழைய முறையின் கீழ் மாகாண சபை தேர்தல் – தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணக்கம்!


பழைய முறையின் கீழ் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுன்ற தெரிவுக்குழு கூட்டத்தின்போது, இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

அனைத்த தேர்தல்களும் தொகுதிவாரி முறைமையின் கீழ் 60 சதவீதமும் விகிதாசார முறைமையின் கீழ் 40 சதவீதமும் இணைந்த கலப்பு தேர்தல் முறைமைக்கு ஏற்ப நடத்தப்பட வேண்டுமென இதன்போது இணக்கம் காணப்பட்டதாக அந்தக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, புதிய முறைமை கொண்டுவரப்படும் வரையில் பழைய முறைப்படியே தேர்தல் நடத்தப்பட வேண்மெனவும் இதன்போது இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

No comments: