News Just In

2/24/2022 05:19:00 PM

பதிலடி கொடுத்த உக்ரைன் - 7 ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தியது!



உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. ரஷ்யா தாக்குதலில் இருந்து உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுத்து வருகிறது.அந்த வகையில் ரஷ்யாவின் 7 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த தாக்குதலில் 50 ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளைரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் 'பாரிய பொருளாதார தடைகளை” விதிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனின் இதனை தெரிவித்துள்ளார்.இன்று, ஐரோப்பிய தலைவர்களுக்கு ஒப்புதலுக்காக "பாரிய மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தடைகளின் தொகுப்பு" வழங்கப்படும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த தடைகள் மூலம், முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தைகளுக்கான அணுகலைத் தடுத்து ரஷ்யப் பொருளாதாரத்தின் மூலோபாயத் துறைகளை குறிவைக்கப்படும்.அத்துடன் ரஷ்யாவின் பொருளாதாரத் தளத்தையும் நவீனமயமாக்கும் திறனையும் பலவீனப்படுத்தப்போவதாக அவர் கூறியுள்ளார்.இதேவேளை ரஷ்யா இதுவரை கண்டிராத கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments: