News Just In

1/03/2022 06:44:00 AM

புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் பணிகளுக்காக செல்லவுள்ளவர்களுக்கு சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!

புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் பணிகளுக்காக செல்லவுள்ளவர்களுக்கு சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் யாரையும் கட்டிபிடிக்க வேண்டாம் என சுகாதார பிரிவு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. ஒமிக்ரோன் வைரஸ் பரவல் மிகவும் வேகமாக பரவும் என்பதனால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அலுவலக பணிக்காக செல்லும் போது வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கட்டிபிடிப்பது கைகுலுக்குவது போன்ற விடயங்கள் மேற்கொள்ளும் போது வைரஸ் மிகவும் வேகமாக பரவும் என சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒமிக்ரான் அறிகுறிகள் என்ன?
1. அதிக உடல் சோர்வு
2. தலை வலி
3. வறட்டு இருமல்
4. தொண்டை கரகரப்பு
5. லேசான காய்ச்சல்
6. இரவில் அதிகமாக வியர்வை ஏற்படுதல்
7. ஓமிக்ரோன் வைரஸ் முதலில் எங்கு ஆரம்பம் ஆனது?

கொரோனா மற்றும் ஓமிக்ரானிலிருந்து உங்கள பாதுகாக்க இந்த குளிர்காலத்தில் நீங்க என்ன சாப்பிடணும் தெரியுமா?

நெய்

நெய் எளிதில் ஜீரணிக்கக்கூடிய கொழுப்புகளில் ஒன்றாகும். இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எனவே தினமும் பிற உணவுகளுடன் சேர்த்து எடுத்து கொள்ளலாம்.

இனிப்பு உருளைக்கிழங்கு

இனிப்பு உருளைக்கிழங்கில் வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது ஒரு பருவகால பழம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வெல்லம்

வெல்லத்தில் இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், செலினியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல தாதுக்கள் நிறைந்துள்ளன. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது.

இஞ்சி

இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது குளிர்காலத்தில் தொண்டை புண் குணப்படுத்த உதவுகிறது. இஞ்சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது.

வால்நட்ஸ்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த வால்நட்ஸ் உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மேலும், அக்ரூட் பருப்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

No comments: