News Just In

1/08/2022 06:02:00 AM

தமிழ் மொழியையும் தேசிய மொழியாகப் பிரகடனப்படுத்தியிருந்தால் 30 வருட கால கொடூர யுத்தத்தத்தையும் தவிர்த்திருக்கலாம்- அமைச்சர் டலஸ் அழகப்பெரும.


நூருல் ஹுதா உமர்
தமிழில் உரையாற்ற முடியாமைக்கு வருந்துகின்றேன் அதுமட்டுல்ல வெட்கமும் படுகின்றேன். தமிழில் பேசமுடியாமைக்கு நானோ அல்லது என பெற்றோர்களோ அல்லது எனது ஆசிரியர்களோ காரணமல்ல சுதந்ததிரத்திற்குப்பின் வந்த கொள்கை வகுப்பாளர்களே இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். இலங்கை சுதந்திரம் பெற்ற போது 1948 ஆம் ஆண்டு சுதந்திர சதுக்கத்தில் வைத்து உரையாற்றிய டி.எஸ்.சேனநாயக சகோதர தமிழ்மொழியையும்தேசியமொழியாகப்பிரகடனப்படுத்தியிருந்தால் 30 வருட கால கொடூர யுத்தத்தத்தையும் தவிர்த்திருக்கலாம். இருப்பினும் இப்போது கடந்த வரலாறுகளைப்பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை என வெகுசன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ .அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற 200 ஆவது கொடியேற்ற விழாவையொட்டி முத்திரை வெளியிட்டுவைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நான் அரசியல் வாதியாக முதன் முதலில் கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்தது நாட்டில் கொழும்பு உட்பட வட கிழக்கில் யுத்தம் தீவிரமடைந்திருந்த 2005 ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவோடு அக்கரைப்பற்றுக்கு வந்தது தான். அப்போது அரசியல் வாதிகளும் முப்படைத்தளபதிகளும் பங்கர்களில் பதுங்கியிருந்த காலம் அப்போது மஹிந்த அக்கரைப்பற்றில் வைத்து மக்களுக்கு யுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வந்து நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வருவதாக வாக்குறுதியளித்து அதை நிறைவேற்றியும் காட்டினார். சுதந்திரத்திற்குப் பின் ஆட்சிக்கு வந்த சகல கட்சிகளும் இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைத்தே ஆட்சிக்கு வந்தன இதன் விளைவு இதற்கான வட்டியையே நாம் இப்போதும் செலுத்திக்கொண்டிருக்கின்றோம்

கடற்கரைப்பள்ளி என்பது இந்த மாவட்டத்திற்கு மட்டுமல்ல முழு தேசத்திற்கும் ஒரு புண்ணிய பூமியாகும் இந்த பிரதேசத்திற்கு சகல இன.மக்களும் வந்து செல்கிறார்கள். இன ஐக்கியத்தை உருவாக்குவதில் இப்புனித பூமி. ஒரு மத்திய ஸ்தானமாகும் இதனை புனித பூமியாக மாற்றித்தருமாறு இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த விடயம் நிச்சயமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது கவனத்திற்குக்கொண்டு செல்லப்படும் மக்கா வெற்றி பற்றி நான் படித்திருக்கின்றேன்.அந்த வெற்றியின் பின் முஹம்மத் நபியவர்கள் கூறிய வார்த்தைகளை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் மதிக்கப்பட வேண்டும் எற்றத் தாழ்வுகள் கிடையாது. ஏற்றத்தாழ்வுகளை கால்களுக்குக்கீழ் போட்டு மிதித்தார்கள் நபியவர்கள் . எனவே இந்த செய்தி உலகிற்கே முக்கியமான செய்தியாகும். உங்களது பாராளுமன்ற உறுப்பினரான ஹரீஸ் துடிப்புள்ள மார்க்கப்பற்றுள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உங்களது பிரச்சினைகள் தேவைகள் பற்றி தியவன்னாவில் உரத்துப்பேசுகின்றார். இவரும் முன்னாள் அமைச்சர் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவும் எங்களோடு இணைந்து பயணிப்பது எங்களுக்கு மிகவும் சந்தோஷமளிக்கின்றது எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், அரச உயரதிகாரிகள், நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


No comments: