News Just In

12/25/2021 04:57:00 AM

இன்று நத்தார் பண்டிகையினை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் இனிய நத்தார்தின நல்வாழ்த்துக்கள்! - VTN செய்திக் குழுமம்

டிசம்பர் மாதம் 25ம் திகதி இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக முதன் முதலில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம் 1510ம் ஆண்டு ரிகா என்ற இடத்தில் துவங்கியது. 1836ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அலபாமா என்ற பகுதியில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. 1840ம் ஆண்டு இங்கிலாந்தில் முதன் முதலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வழக்கம் துவங்கப்பட்டது. 

இந்த நன்னாளில் உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைத்து இயேசு பிரானை துதி பாடி உள்ளம் உருகி வேண்டி, அவர் உலகில் அவதரித்த நாளினை கொண்டாடி மகிழ்கின்றனர். அந்தவகையில் உலகெங்கும் நத்தார் பண்டிகையினை கொண்டாடும் அனைவருக்கும் VTN செய்திக் குழுமத்தின் சார்பாக இனிய நத்தார்தின  நல்வாழ்த்துக்கள்!

No comments: