News Just In

12/10/2021 07:22:00 PM

நிந்தவூர் அல் அஷ்ரக்தேசிய பாடசாலைக்கு மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான CCTV கமரா வசதிகள் இன்று கையளிப்பு!


கல்முனை கல்வி வலய நிந்தவூர் கமு/ கமு/ அல் அஷ்ரக் தேசிய பாடசாலைக்கு சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான சி சி டி வி கமரா வசதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்வு இன்று 2021.12.10 அல் அஷ்ரக் தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு, கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நிதி அனுசரணையுடன் 20 CCTV கேமராக்கள் மற்றும் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தவிசாளர் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் றிசான் ஜெமீலின் ஆலோசனைக்கு அமைவாக "மாணவர் மகிமை" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பான கற்றல் சூழலை ஏற்படுத்தும் நோக்குடன் இதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம் ஜே இஸட் எம் ஜமால்டீன், திட்டப் பணிப்பாளர் டாக்டர் எம் ஏ எம் முனீர், பெஸ்ட் ஒப் யங் அரச சார்பற்ற நிறுவனத்தின் கலாபூஷணம் எஸ் அஹமது, செயலாளர் ஏ புஹாது, உபதலைவர் எம் எஸ் எம் நிப்றாஸ், டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் எம் எஸ் எம் நஜீம்டீன், உதவி முகாமைத்துவ பணிப்பாளர் எம் இஸட் எஸ் றியாஸ், நலன்புரி முகாமையாளர் எஸ் எம் அஜ்வத் ஆகியோர் கலந்து கொண்டு இதனை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நூருல் ஹுதா உமர்






No comments: