ஜனாதிபதியின் சுபீட்சத்திற்கான நோக்கு வேலைத் திட்டத்தில் சேதனை பசளை உற்பத்தி தொடர்பாகவும், பாவனை தொடர்பான பயிற்சி நெறிகளும் பிரதேச செயலகம் தோறும் இடம்பெற்று வருகின்றது.
ஓட்டமாவடி விதாதா வள நிலையத்தின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராம சேவகர் பிரிவுகள் தோறும் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கில் சேதனை பசளை தயாரிக்கும் பயிற்சி நெறி ஓட்டமாவடி ஸம் ஸம் சேதனை பசளை உற்பத்தி நிறுவனத்தில் இடம்பெற்றது.
அந்தவகையில் பிரம்புகள், பித்தளை, மண்பாண்டங்கள், மரப் பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயற்றிட்டத்தின் கீழ் சேதனை பசளை தயாரிக்கும் பயிற்சி நெறி ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜாவின் வழிகாட்டலில் இடம்பெற்றது.
ஓட்டமாவடி விதாதா வள நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.எம்.புர்ஹானுர்தீன் தலைமையில் இடம்பெற்ற பயிற்சி நெறியில் வளவாளராக ஓட்டமாவடி விவசாய போதனாசிரியர் எம்.ஜமால்டீன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments: